டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகை டாப்ஸி ட்வீட்!

Default Image

டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு பிரபல ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகர்கள் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் நடிகை டாப்ஸியும் தனது ஆதரவை ட்விட்டர் பதிவு மூலமாக தெரிவித்துள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்கள் அண்மையில் கலவரமாகவும் மாறியது. இந்நிலையில் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டேதான் இருக்கின்றனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக பல்வேறு நடிகர்களும் நடிகைகளும் கிரிக்கெட் வீரர்களும் தங்களது கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வரிசையில் பிரபல நடிகை டாப்ஸி பன்னு அவர்களும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு ட்வீட் உங்கள் ஒற்றுமையை குலைக்குமானால், ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையை குலைக்குமானால், ஒரு நிகழ்ச்சி உங்கள் மதத்தை குலைக்குமானால் உங்களது மதிப்பு முறையை வலுப்படுத்துவதற்காக நீங்கள் தான் பணியாற்ற வேண்டும் எனவும், நீங்கள் மற்றவர்களுக்கு பிரச்சார ஆசிரியராக மாறக் கூடாது எனவும் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha
TVK Vijay
TamilagaVettriKazhagam
TVK - meeting