மாஸ்டர் படத்தின் “அந்த கண்ண பாத்தாக்கா” வீடியோ பாடல் வெளியீடு…!

மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற அந்த கண்ண பாத்தாக்கா வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் நடிகை மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் நடிகை ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.
இந்த திரைப்படம் வெளியான நாட்களில் இருந்து தற்போது வரை இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுவருகிறது. உலகளவில் தற்போது வரை 248 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று யூடியூபில் 40 மிலியனிற்கும் மேல் பார்வையாளர்களை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் இடம்பெற்ற அந்த கண்ண பாத்தாக்கா வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நடைபயணத்திற்கு தடை – நீதிமன்றத்தை நாடும் அன்புமணி.!
July 26, 2025
2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை.!
July 26, 2025