முதல்ல “எனக்கு கல்யாணம் நடக்கணும்”… தனது செல்லப்பிராணியுடன் வீடியோ வெளியிட்ட சிம்பு..!

Default Image

நடிகர் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது செல்லப்பிராணியுடன் பேசும் வீடியோ ஒன்று சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சிம்பு நடிப்பில் கடந்த மாதம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அதற்கு பிறகு பத்து தல திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இதனை தொடர்ந்து நேற்று உலகம் முழுவதும் காதலர்கள் காதலர் தினத்தை கொண்டாடினார்கள். இந்த நிலையில் நடிகர் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது செல்லப்பிராணியுடன் பேசும் வீடியோவை வெளியீட்டுள்ளார். இந்த வீடியோவில் சிம்பு தனது செல்லப்பிராணியுடன் பேசியது ” நீ ஒரு பொண்ணு இப்ப தான் வளர்ந்து வந்துருக்க. நீ ஒரு பையனை இப்ப சந்திக்கணும் அந்த பையனோட உனக்கு சில விஷயங்கள் எல்லாம் நடக்கணும்.

அதுக்கு முதல்ல எனக்கு கல்யாணம் நடக்கணும். நான் மட்டும் தனியா இருக்கேன் நீ மட்டும் ஜாலியா இருந்தா அது நியாயமில்லை. புரிஞ்சதா பப்பு என் கஷ்டம் உனக்கு புரியுதா இல்லையா ஏதாவது பேசு பரவால்ல பரவால்ல எனக்கு அந்த கடவுள் கொடுப்பார். வரும்போது வரட்டும் நீ சந்தோசமா இரு”. என்று பேசியுள்ளார்.

இந்த வீடியோ பார்த்த சிம்பு ரசிகர்கள் ஒரு காலத்தில் எப்படி இருந்தவர் இப்போது இப்படி ஆகிவிட்டரே என்று கூறி வருகிறார்கள். அந்த வீடியோ 8 லட்சத்திற்கும் மேல் பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோ தற்போது சமுகவைலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்