சாதிய அடையாளத்துடன் திருவள்ளுவர் – டி.டி.வி. கண்டனம்..!

Default Image

சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் தலையில் முடி இல்லாமல் குடுமி வைத்து காவி உடை அணிந்து கோவில் குருக்கள் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், CBSE எட்டாம் வகுப்பு இந்தி பாடப்புத்தகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதிய அடையாளத்துடன் திருவள்ளுவரை வரைந்திருப்பது கண்டனத்திற்குரியது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என உலகப் பொதுமறை தந்த வள்ளுவரை, மாணவச் செல்வங்களுக்கு இப்படி தவறாக கற்பிப்பதை ஏற்க முடியாது.

அந்தப் படத்தை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்குவதுடன், இனி இத்தகைய தவறுகள் நிகழாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளை CBSE மேற்கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்