பசுமாட்டுக்கு கிடைக்கும் மரியாதை கூட தமிழனுக்கு கிடைக்கவில்லை-கமல்ஹாசன்..!

இன்று வரை 7 முறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன் அனுமதி கிடைக்கவில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரத்தில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ம் ஆண்டு தொடக்க விழாவினை
நடத்திக் கொண்டிருக்கிறார். கூட்டத்தில் பேசிய கமலஹாசன், இன்று வரை 7 முறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன் அனுமதி கிடைக்கவில்லை. பசுமாட்டுக்கு கிடைக்கும் மரியாதை கூட தமிழனுக்கு கிடைக்கவில்லை. பிரதமரை சந்தித்து காவி துண்டு அணிவதற்கு கேட்கவில்லை.
மக்களின் பிரச்சனை குறித்து பேசுவதற்கு அனுமதி கேட்டேன் கிடைக்கவில்லை. திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் இருக்கும் நல்லவர்கள் மக்கள் நீதி மய்யத்திற்கு வாருங்கள். எம்.ஜி.ஆரை முதல்வராக பார்க்கவில்லை அண்ணனாக பார்த்தேன். நான் கோபத்தில் அரசியலுக்கு வரவில்லை, மக்கள் அன்பு மற்றும் அழுகையில் வந்தவன் என தெரிவித்தார்.