திமுக தலைமையில் ஆட்சி அமைந்ததும் மீண்டும் சட்டப்பேரவைக்கு வருவோம் – துரைமுருகன்

சட்டசபையை முழுவதுமாக புறக்கணிக்கிறோம் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும்,நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது 11-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட் உரையை வாசிக்க முன்பே தங்களுக்கு பேச அனுமதி கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால், சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது. பின் சட்டசபை கூட்டத்தில் இருந்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.இதனையடுத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசினார்.அவர் பேசுகையில், திமுக ஆட்சி முடியும் போது தமிழகத்தின் கடன் ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது.வெட்கம், சூடு, சுரணை இல்லாமல் 5 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளது என்று சொல்கிறார்கள் .பழனிசாமியும், பன்னீர்சல்வமும் அழிக்க முடியாத கரும்புள்ளிகளை ஏற்படுத்தி உள்ளனர்.திமுக தலைமையில் ஆட்சி அமைந்ததும் மீண்டும் சட்டப்பேரவைக்கு வருவோம்.அதுவரை சட்டசபையை முழுவதுமாக புறக்கணிக்கிறோம்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025