கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன்…! நீங்களும் போட்டுக் கொள்ளுங்கள்…! – கவிஞர் வைரமுத்து

இந்தியா பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்தியா பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதனை அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘நேற்று… கொரோனா தடுப்பூசி இட்டுக்கொண்டேன். அதனால் உடலில் நிகழும் வேதியியல் மாற்றங்களை என்னால் உணர முடியவில்லை. ஆனால், அது நல்கும் உளவியல் பாதுகாப்பை என்னால் மறைக்க முடியவில்லை. ஆகவே, மாண்புமிகு மக்களே! நீங்களும்…’ என பதிவிட்டுள்ளார்.
நேற்று…
கொரோனா தடுப்பூசி இட்டுக்கொண்டேன்.அதனால் உடலில் நிகழும்
வேதியியல் மாற்றங்களை
என்னால் உணர முடியவில்லை.ஆனால்,
அது நல்கும் உளவியல் பாதுகாப்பை
என்னால் மறைக்க முடியவில்லை.ஆகவே…
மாண்புமிகு மக்களே!
நீங்களும்…#CoronaVaccine pic.twitter.com/8RjR69U2mz— வைரமுத்து (@Vairamuthu) March 7, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025