104 வயதில் அப்துல்கலாமின் சகோதரர் காலமானார்…!

Default Image

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் மூத்த சகோதரரான ஏபிஜே முத்து மீரான் லெப்பை மரைக்காயர் வயது முதிர்வின் காரணமாக ராமேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

டாக்டர்.ஏபிஜே அப்துல்கலாம் ராமேஸ்வரத்தில் ஒரு ஏழ்மையான முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். இவர் சிறுவயது முதற்கொண்டே துடிப்புடன் செயல்பட்ட போதிலும், தனது முதுமைப் பருவத்திலும் அந்த துடிப்புடன் செயல்பட்டார். இந்நிலையில், இவர் விஞ்ஞானி, பிரதமரின் ஆலோசகர், குடியரசுத் தலைவர் என பன்முகத்தன்மை கொண்ட தலைமை பொறுப்புகளை வகித்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு, ஜூலை 27-ஆம் தேதி, இவர் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது  மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மரணம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் மூத்த சகோதரரான ஏபிஜே முத்து மீரான் லெப்பை மரைக்காயர் வயது முதிர்வின் காரணமாக ராமேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 104. இதனையடுத்து, பல்வேறு தலைவர்களும் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்