மம்தா மீதான வெட்கக்கேடான தாக்குதல் இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – மு.க.ஸ்டாலின்

மேற்கு வங்க முதல்வர் மம்தாவை 4-5 பேர் சேர்ந்து தள்ளி விட்டதாகவும், இதனால் அவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக புகாரளித்துள்ளார். இது, அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில்,மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி அவர்கள் மீதான வெட்கக்கேடான தாக்குதல் இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும்.இத்தகைய குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இனி இவ்வாறு நிகழாதவாறு தேர்தல் ஆணையமும் காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மமதா அவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன் என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
கூட்டணி குறித்த கேள்வி! விஜய பிரபாகரன் சொன்ன பதில்!
July 28, 2025