‘சோதனைக்கு ஒத்துழைக்கவில்லை’ – அமைச்சர் கடம்பூர் ராஜு மீது வழக்கு பதிவு…!

தேர்தல் பறக்கும் படை அதிகாரியின் சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால், அமைச்சர் கடம்பூர் ராஜு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக உள்ள கடம்பூர் ராஜு அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் இந்த சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் அனைத்து வாகனங்களையும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்ற நிலையில், கடம்பூர் ராஜு மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்ற காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரி மாரிமுத்து, கடந்த 2-ஆம் தேதி வழிமறித்து சோதனை செய்துள்ளார்.
மேலும் மீண்டும் இன்னொரு முறையும் காரை தேர்தல் அதிகாரிகள் மாரிமுத்து மேற்கொண்டதையடுத்து, இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு திட்டமிட்டு தங்களை சோதனை செய்வதாக புகார் தெரிவித்தார். தேர்தல் அதிகாரி மாரிமுத்துவும் காவல்நிலையத்தில் என்னுடைய சோதனைக்கு இடம் தரவில்லை என்றும், முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து தற்போது அமைச்சர் கடம்பூர் ராஜு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சோதனை செய்த அதிகாரி மாரிமுத்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால், நடவடிக்கை தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை.!
July 28, 2025
ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.., கொல்லப்பட்டவர்கள் பஹல்காம் தீவிரவாதிகளா?
July 28, 2025