நக்மாவிற்கு கொரொனோ தொற்று உறுதி..!-காங்கிரஸ் தலைவர் சோனியா பிரார்த்தனை..!

நடிகை நக்மாவிற்கு கொரொனோ தொற்று உறுதியாகியுள்ள நிலையில் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொன்டுள்ளார்.
திரைப்பட நடிகையும் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான நக்மாவிற்கு தற்போது கொரொனோ தொற்று உறுதியாகியுள்ளது.
நக்மா ஏப்ரல் 2ம் தேதியன்று கோவிட்-19 தடுப்பூசியின் முதல் அளவைப் போட்டுக்கொண்டார்.இதற்கிடையில் அவருக்கு இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றியுள்ளன.
இதனையடுத்து பரிசோதனை மேற்கொண்டதில் நக்மாவிற்கு கொரொனோ தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.எனவே, தனது வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக்கொன்டுள்ளதாக நக்மா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதைப்பற்றி நக்மா ட்விட்டரில் கூறியதாவது,”சில நாட்களுக்கு முன்புதான் எனது முதல் அளவு தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன்.இருப்பினும் எனது உடல்நிலை தற்போது சரியில்லாத காரணத்தால் கோவிட் -19 பரிசோதனை செய்துகொண்டேன்,ஆனால் எனது சோதனை பாசிடிவ் என வந்துள்ளது.
எனவே என்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். அனைவரும் தயவுசெய்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். தடுப்பூசியின் முதல் அளவு எடுத்த பிறகும் கூட எந்த வகையிலும் மனநிறைவைப் பெறாமல், பாதுகாப்பாக இருங்கள் “என்று கூறினார்.
Wishing you a speedy recovery. Prayers ????
— Sonia Gandhi???? (@SoniaGandhi_FC) April 8, 2021
நக்மாவின் ட்வீட்டிற்கு பதலளித்துள்ள காங்கிரசின் தலைவர் சோனியா காந்தி, “விரைவில் உங்கள் உடல்நிலை சரியாக வேண்டிக்கொள்கிறேன்”, என்று குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025