அரக்கோணம் இரட்டை கொலை…! 6 பேர் கைது…!

அரக்கோணம் இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 7-ஆம் தேதியன்று, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த கௌதம் நகரில் இருதரப்பினர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த வாய்த்தகராறு இறுதியில் மோதலாக மாறிய நிலையில், இரு தரப்பினரும் கத்தி, பாட்டில் என கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். இந்த மோதலில் அர்ஜுன், சூர்யா என இருவர் உயிரிழந்த நிலையில், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு முதல், அர்ஜூன், சூர்யா ஆகியோரின் உறவினர்கள் மற்றும் சோமனூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் குருவராஜப்பேட்டை – திருத்தணி சாலையில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் களைந்து சென்றனர்.
இது குறித்து வடக்கு மண்டல ஐஜி சங்கர் கூறுகையில், இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு வன்கொடுமை சட்ட விதிகளின்படி நிவாரண தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கொலையில் தொடர்புடைய சுரேந்திரன், அஜித் மதன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், மற்றவர்களையும் கைது செய்வதற்கான தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் காவல்துறை நேர்மையாகவும் நடுநிலையாகவும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025