சிலம்பரசனுக்கும், வெங்கட் பிரபுவுக்கும் மாநாடு மைல்கல்லாக அமையும் – சுரேஷ் காமாட்சி..!!

நடிகர் சிம்புவிற்க்கும் வெங்கட் பிரபுவுக்கும் மாநாடு மைல்கல்லாக அமையும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
இந்த நிலையில் படத்தை பற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியது ” நான் பார்த்தவரைக்கும் மாநாடு திரைப்படம் சிலம்பரசனுக்கும் இயக்குனர் வெங்கட் பிரபுரவிற்கும் ஒரு மைல்கல்லாக அமையும். இருவருக்கும். படத்தில் உடன் பணிபுரிந்த நடிகர்கள். தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என்றும் கூறியுள்ளார்.
இந்த திரைப்படத்திலிருந்து பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விரைவில் படத்திற்கான டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025