கோவை: தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் இரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை…!

கோவை மாவட்டத்தில் இரயில் முன் பாய்ந்து ஒரு காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தின் இருகூர் பகுதி அருகே, இன்று அதிகாலை 3 மணியளவில் ஒரு காதல் ஜோடி பெங்களூரில் இருந்து கன்னியாக்குமரி நோக்கி சென்று கொண்டிருந்த இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.இதில்,இருவரது உடலும் தனித்தனியாக சிதறியது.
இதுகுறித்து இரயில்வே போலீஸ் விசாரணை செய்ததில்,ஒன்டிப்புதூர் பகுதியில் வசிக்கும் பிரவீன் குமார்(வயது 31) மற்றும் வடவள்ளியை சேர்ந்த ஸ்ரீவித்யா(வயது 31) ஆகிய இருவரும் காதலித்து வந்தனர் என்றும்,இருவரும் சேர்ந்து ஆரம்பித்த ஆன்லைன் வியாபாரத் தொழிலில் நஷ்டம் அடைந்ததால் இருவரும் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து,இருகூர் தாலுகா போலீஸ் நடந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025