#Breaking: அதிகரிக்கும் கொரோனா.. மருத்துவர்களுடன் இன்று மாலை பிரதமர் ஆலோசனை!

As the spread of corona in India continues, Prime Minister Modi will hold a consultation with the best doctors in the country at 4.30 pm today.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், நாட்டின் சிறந்த மருத்துவர்களுடன் இன்று மாலை 4:30 மணிக்கு பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுபடுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், நாள் ஒன்றுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று காலை அமைச்சர்களுடன் கொரோனா பரவல் தொடர்பாகவும், கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினார், அதனைதொடர்ந்து, நாட்டின் சிறந்த மருத்துவர்களுடன் இன்று மாலை 4:30 மணிக்கு பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். அதுமட்டுமின்றி, சிறந்த மருந்து நிறுவனங்களுடனும் மாலை 6 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.