மும்பையில்17 வயது சிறுமியை கற்பழித்து, வீடியோ எடுத்த 3 சிறுவர்கள் கைது!

மும்பையில்17 வயது சிறுமியை கற்பழித்து, வீடியோ எடுத்த 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் பெண் குழந்தைகள் வெளியில் நடமாடுவதே பயப்படக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது. பெண்களுக்கும் பாதுகாப்பு கிடையாது பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கிடையாது என்ற நிலைதான் உருவாகியுள்ளது. சிறுவயதில் உள்ள ஆண்களே பெண்களை தவறாக பார்க்கக்கூடிய அளவிற்கு சமுதாயம் சீரழிந்து உள்ளது. மும்பையில் தற்பொழுது பதினேழு வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காகவும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 வயது சிறுமியை பலாத்காரம் செய்து அதை வீடியோவாக பதிவிட்டதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு நிமிட வீடியோவாக இந்த வீடியோ வாட்சாப்பில் வலம் வந்ததாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் ஒருவர் தான் அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மூவருமே 20 முதல் 22 வயதுக்கு உட்பட்ட சிறிய வயதுடையவர்கள் என கூறப்படுகிறது. இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், பாலியல் குற்றங்கள் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025