அடங்கமறு இயக்குனருடன் கைகோர்க்கும் விஷால்..??

நடிகர் விஷால் அடுத்ததாக அடங்கமறு திரைப்படத்தின் இயக்குனரான கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஒரு அதிரடியான ஆக்சன் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஷால் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக எனிமி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் ஆர்யாவும் முக்கியமான கதா பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் சரவணன் இயக்கத்தில் தனது 31 வது படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் விஷால் இந்த திரைப்படங்களை தொடர்ந்து, அடுத்ததாக அடங்கமறு திரைப்படத்தின் இயக்குனரான கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஒரு அதிரடியான ஆக்சன் படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தை ஆடுகளம் படத்தை தயாரித்த கதிரேசன் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025