புதுச்சேரியில் மேலும் 11 காவல் துறையினருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஏற்கனவே புதுச்சேரியில் 465 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 11 போலீசாருக்கு கொரோன தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் தினமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்திலும் கொரோனாவின் பாதிப்பு தினமும் தொடர்ந்து கொண்டிருப்பதுடன் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக பொது மக்களை விட கொரோனா நெருக்கடிக் காலகட்டத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்ற கூடிய காவல்துறை அதிகாரிகள், காவல்துறையினர் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு தான் தற்பொழுது கொரோனாவின் பாதிப்பு மிக அதிக அளவில் ஏற்படுகிறது. அதிலிருந்து சிலர் மீண்டு விடுகின்றனர். ஆனால், பல முன் களப்பணியாளர்கள் இந்த கொரோனா பாதிப்பினால் உயிரிழந்து விடுகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் இதுவரை 465 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 11 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025