கொரோனா நோயாளிகளுக்காக காரை ஆம்புலன்ஸாக மாற்றி உதவும் மதுரை இளைஞர்கள்..!!

மதுரையில் இளைஞர்கள் தங்களது சொந்த காரை ஆம்புலன்ஸாக மாற்றி கொரோனா நோயாளிகளை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று உதவி
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தீவரமடைந்து வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் திங்கள் கிழமை முதல் வரும் 30ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணத்தால் ஏழைமக்கள் வருமானமின்றி தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவு, மற்றும் நிவாரண நிதி போன்ற உதவிகளை பலர் செய்து வருகின்றார்கள். அந்த வகையில் நேற்று கூட மதுரை இளைஞர்கள் சிலர் ஆதரவற்று இருக்கக்கூடிய முதியோர்கள், யாசகர்கள் ஆகியோருக்கு உணவு செய்து வழங்கினார்கள்.
அதனை தொடர்ந்து தற்போது மதுவரை மாவட்டத்தில் இரண்டு இளைஞர்கள் தங்களது சொந்த காரை ஆம்புலன்ஸாக மாற்றி கொரோனா நோயாளிகளை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று உதவி செய்து வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி மறைவு : நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!
July 14, 2025
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025