அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றால் மேலும் ஒரு ஆ ண் சிங்கம் உயிரிழப்பு…!

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த 3-ஆம் தேதி பெண் சிங்கம் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு ஆண் சிங்கம் உயிரிழந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மனிதர்களுக்கு மட்டுமே பரவி வந்த கொரோனா தொற்று விலங்குகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. சிங்கங்கள் குரங்குகள் என பல விலங்குகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த 3-ஆம் தேதி 9 வயது பெண் சிங்கம் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தது.
இதனையடுத்து அந்த உயிரியல் பூங்காவில் இருந்த அனைத்து சிங்கங்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், ஒன்பது சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்பொழுது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை சேர்ந்த மேலும் ஒரு ஆண் சிங்கம் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025