தூத்துக்குடி இலங்கை அகதிகள் முகாமில் திமுக எம்.பி.கனிமொழி ஆய்வு!

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகரிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் திமுக எம்.பி கனிமொழி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகரிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வின் பொழுது அவருடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் சென்றுள்ளனர். திமுக எம்.பி கனிமொழி தங்கள் முகாமிற்கு வருகை தருவதை கண்ட மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அனைவரிடமும் நலம் விசாரித்த எம்.பி கனிமொழி ஒவ்வொருவரிடமும் குறைகளை கேட்டறிந்துள்ளார். அப்பொழுது, முகாம் மக்கள் தங்களுக்கு குடியுரிமை வாங்கி தருமாறு கோரிக்கை வைத்ததுடன், பழுதடைந்த நிலையில் உள்ள தங்கள் இல்லங்களை சரி செய்து தருமாறும் கேட்டுள்ளனர். அனைவரின் குறைகளையும் கேட்டறிந்த எம்.பி கனிமொழி முகாமிலுள்ள 70 குடும்பங்களுக்கும் தேவையான நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025