மருத்துவ பரிசோதனை முடிந்தது – சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.!

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 4 ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.
ரஜினிக்கு சிறுநீரக பிரச்சினை இருந்த காரணத்தால் கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளினிக்கில் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சிகிச்சையை தொடர்ந்து ஆண்டிற்கு ஒரு முறை அமெரிக்கா சென்று உடல்நிலையை பரிசோதித்து வருகிறார்.
அந்தவகையில், கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி அமெரிக்காவிற்கு பரிசோதனைக்காக சன்றார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து இன்று ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் ரஜினியை அவரது ரசிகர்கள் தலைவா, என கோஷமிட்டு வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ‘மருத்துவ பரிசோதனை நல்லபடியாக முடிந்தது’ என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025