மெஸ்ஸி பிரி என்ற பீடி பாக்கெட்டில் லியோனல் மெஸ்ஸியின் புகைப்படம்..!#வைரல்..!

மெஸ்ஸி பிரி என்ற பீடி பாக்கெட்டில் லியோனல் மெஸ்ஸியின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதால் இது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசிலை தோற்கடித்து வெற்றியை பெற்றுள்ளார். இவர் ஆறு முறை பலூன் டி’ஆர் என்ற விருதை பெற்றவர். இந்த நட்சத்திர வீரருக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
இதற்கு மத்தியில் மெஸ்ஸியின் புகைப்படத்துடன் ஒரு பீடி பாக்கெட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து பலரும் அவர்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இறுதியாக நட்சத்திர கால்பந்து வீரர் இந்தியாவில் ஒப்புதல் அளித்து உள்ளார் என்று பலரும் அவர்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த பீடி பாக்கெட்டின் பெயர் மெஸ்ஸி பிரி. இந்த பாக்கெட்டில் மெஸ்ஸியின் புன்னகையான புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த பாக்கெட் தயாரிப்பு குறித்து அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு வங்காளம் துலியானில் உள்ள ஆரிப் பீடி தொழிற்சாலையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இந்த புகைப்படத்தை ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவில் மெஸ்ஸியின் முதல் ஒப்புதல்” என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் குறித்து சமூக வலைத்தளத்தில் பலரும் கேலி செய்தும், மீம்ஸ் வெளியிட்டும் வருகின்றனர்.
Messi’s first endorsement in India
☺️☺️☺️☺️☺️ pic.twitter.com/07vh7bTMwC— Rupin Sharma IPS (@rupin1992) July 13, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025