முதுபெரும் தமிழ் புலவர் இளங்குமரனார் காலமானார்…!

முதுபெரும் தமிழ் புலவரான இரா.இளங்குமரனார் அவர்கள் வயோதிகம் காரணமாக காலமானார்.
முதுபெரும் தமிழ் புலவரான இரா.இளங்குமரனார் அவர்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர் ஆவார்.
இவர் திருநெல்வேலி மாவட்டம் வளவந்தல்புரம் கிராமத்தில் 1927 ஆம் ஆண்டு,தந்தையார் படிக்கராமர், தாய் வாழவந்தம்மையார் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் தமிழில் பல நூல்களை எழுதியுள்ளார். அந்த வகையில் இவர் எழுதிய, திருக்குறள் கட்டுரை தொகுப்பு என்ற நூலை 1963ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு அவர்கள் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து சங்க இலக்கிய வரிசையில் புறநானூறு என்னும் நூலை 2003-ஆம் ஆண்டு அப்துல் கலாம் அவர்கள் வெளியிட்டார். இவர் தமிழில் 500-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இந்நிலையில், இவர், தனது 94-வது வயதில் மதுரை திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் வயோதிகம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025