மாநிலங்களின் கையிருப்பில் 2.60 கோடி தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை..!

மாநிலங்களின் கையிருப்பில் 2.60 கோடி தடுப்பூசி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 50,37,22,630 கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
இவற்றில் 48,19,75,798 தடுப்பூசிகளை மாநிலங்கள் பயன்படுத்திவிட்டது. இதனால் தற்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கையிருப்பில் 2 கோடியே 60 லட்சத்து 17 ஆயிரத்து 573 டோஸ் தடுப்பூசிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கூடுதலாக 49,19,780 தடுப்பூசிகள் அனுப்பியுள்ளது. தற்போது மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டு 48 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025