உலகளவில் கொரோனா பாதிப்பு 20 கோடியை தாண்டியது..!

உலகளவில் கொரோனா பாதிப்பு 200,933,269 கோடி பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த கொரோனா தொற்று பரவல் உலக நாடுகளை பெரியளவில் பாதித்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கையும் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
மேலும் கொரோனா வைரஸ் பல வகைகளில் உருமாறி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி உலக நாடுகளில் வேகமாக நடைபெற்று வருகிறது.
உலககில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா முதல் 5 இடங்களில் உள்ளது. தற்போது உலகம் முழுவதும் 200,933,269 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த பெருந்தொற்றினால் 4,269,602 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 180,967,055 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது இந்த கொரோனா தொற்றுக்கு 15,720,295 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025