3 விக்கெட் அடுத்தடுத்து இழந்த இந்தியா.., முதல் பந்திலேயே வெளியேறிய கோலி.., வைரல் வீடியோ..!

இந்தியா 46 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 125ரன்கள் எடுத்துள்ளனர்.
இந்தியா, இங்கிலாந்து இடையில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தனர். முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் பும்ரா 4 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் பறித்தனர். இதைத்தொடர்ந்து, நேற்று இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது.
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியதில் இருந்து இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா அணி 13 ஓவரில் விக்கெட்டை இழக்காமல் 21 ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் ரோஹித் மற்றும் கே.எல் ராகுல் தலா 9 ரன்களுடன் இருந்தனர்.
இன்று 2-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மா 36 தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத்தொடர்ந்து களமிறங்கிய புஜாரா 4 ரன்களில் விக்கெட்டை இழக்க அடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி வந்த முதல் பந்திலேயே பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து இறங்கிய ரகானே 5 ரன்னில் ரன் அவுட்டானார். இந்தியா தற்போது 46 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 125ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் கேஎல் ராகுல் 57*, பண்ட் 7* ரன்கள் எடுத்து இருவரும் விளையாடி வருகின்றன.
WOWWWW! ????@jimmy9 gets Kohli first ball and Trent Bridge is absolutely rocking!
Scorecard/Clips: https://t.co/5eQO5BWXUp#ENGvIND pic.twitter.com/g06S0e4GN7
— England Cricket (@englandcricket) August 5, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!
May 9, 2025