சிவகங்கை மாவட்டம் இளையன்குடியில் தீ விபத்து – வீடு எரிந்து நாசம்!

சிவகங்கை மாவட்டம் இளையன்குடியில் தீ விபத்து ஏற்பட்டதில், வீடு எரிந்து நாசமடைந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் உள்ள கீழாயூர் காலனியை சேர்ந்த வாகித் என்பவர் வீட்டின் முன்பு பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் இன்று காலை விடிந்ததும் பால் பாக்கெட் விநியோகம் செய்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். அப்பொழுது அவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ வீடு முழுவதும் மளமளவென்று பரவியதால், அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்துள்ளனர். இந்த தீ விபத்தில், வீட்டின் மேற்கூரை மற்றும் வீட்டின் அனைத்துப் பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தீ விபத்து ஏற்பட்ட பொழுது வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேற்கொண்டு இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025