தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு-மத்திய அரசு..!

தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் இது குறித்து தெரிவித்ததாவது, கடந்த இரண்டு வாரங்களாக இந்தியா முழுவதும் 37 மாவட்டங்களில் கொரோனா பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
இதில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் இருக்கக்கூடிய மாநிலங்கள் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகியவை ஆகும். கேரளாவில் 11 மாவட்டங்களிலும், தமிழகத்தில் 7 மாவட்டங்களிலும் கர்நாடகத்தில் 5 மாவட்டங்களிலும் தொற்று அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, ஈரோடு, செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுகோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025