புகழேந்தியின் அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி ஓபிஎஸ், ஈபிஎஸ் மனு தாக்கல்..!

ஆகஸ்ட் 24 ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்ட வழக்கினை ரத்து செய்ய கோரி இபிஎஸ், ஒபிஎஸ் மனுத்தாக்கல்
சமீபத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி அதிமுகவை விமர்சித்து இருந்தார். இதனால், அதிமுக செய்தித் தொடர்பாளராக இருந்த புகழேந்தி, ஒவ்வொரு முறையும் கூட்டணி சேர்வது, தேர்தல் தோல்விக்கு பின் மற்றவர்களை விமர்சனம் செய்வது பாமகவின் வாடிக்கையாக உள்ளது என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டார். இதனால், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் மீது எம்.பி. எம்எல்ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் புகழேந்தி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ஆகஸ்ட் 24-ம் தேதி ஓபிஎஸ், இபிஎஸ் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இந்நிலையில், பெங்களூரு புகழேந்தியின் அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரியும், வரும் 24-ல் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு தரக் கோரியும் ஓபிஎஸ், ஈபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025