ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை – ஹரியானா அரசு!

ஆக்சிஜன் பற்றாக்குறையால் மாநிலத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என ஹரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பரவி வரக்கூடிய கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியாவில் அதிக அளவில் பரவ தொடங்கியது. இந்த இரண்டாம் அலையின் பொழுது நாடு முழுவதும் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால், இதன் காரணமாக உயிரிழப்புகளும் அதிக அளவில் ஏற்பட்டது.
இந்நிலையில், சட்டசபையில் வைத்து மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறப்புகள் பதிவாகவில்லையா என காங்கிரஸ் எம்எல்ஏ அஃதாப் அகமது அவர்கள் கேள்வி எழுப்பியதுடன் அக்டோபர் 24, 2020 முதல் ஜூலை 31, 2021 ஹரியானாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தவர்கள் குறித்து தெரிவிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள ஹரியானா மாநில அரசு இதுவரை கொரோனா தொற்று நோயின் பொழுது ஹரியானாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிர் இழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள் குறித்த உண்மையான எண்ணிக்கையை ஹரியானா மாநில அரசு மறைப்பதாக காங்கிரஸ் தலைவர் அகமது குற்றம் சாட்டியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!
July 7, 2025
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!
July 7, 2025