எத்தனை திருமணம் நான் பண்றது.?- ரசிகர் கேள்விக்கு சந்தானம் பதில்.!

ரசிகர் கேட்ட கேள்விக்கு நடிகர் சந்தானம் நக்கலாக பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சந்தானம். பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தற்போது சபாபதி மற்றும் மேலும் பெயரிடாத ஒரு படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் டிக்கிலோனா திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நடிகர் சந்தானம் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் திருமணம் எப்போ தலைவா.? என கேட்டுள்ளார். அதற்கு சந்தானம் ” எத்தனை திருமணம் நான் பண்றது . எனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது.” என நக்கலாக பதிலளித்துள்ளார். நடிகர் சந்தானத்திற்கு கடந்த 2004 – ஆம் ஆண்டு உஷா என்பவருடன் திருமணம் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
கூட்டணி குறித்த கேள்வி! விஜய பிரபாகரன் சொன்ன பதில்!
July 28, 2025
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025