நீட் தேர்வு: சட்ட போராட்டம் நடத்துவோம் – அமைச்சர் ரகுபதி

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
நீட் விலக்கு மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் தராவிடில் சட்ட போராட்டம் நடத்துவோம் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து குடியரசு தலைவரிடம் முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் மூலம் ஏற்கனவே அழுத்தம் தந்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.
இதனிடையே, தமிழக சட்டப்பேரவையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் கொண்டுவந்த நீட் விலக்கு மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது.
இந்த சூழலில் நீட் விலக்கு மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை என்றால் சட்டப்போராட்டம் நடத்துவோம் என்று திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025