நியூசிலாந்து நாட்டின் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு வெடிகுண்டு மிரட்டல்….!

நியூசிலாந்து நாட்டின் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிக்கு இடையே 3-வது ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற இருந்த நிலையில், நியூசிலாந்து அணி நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு மிரட்டல் செய்தி ஒன்று வந்துள்ளது. இதனை நியூசிலாந்து அணியினரும் உறுதி செய்துள்ளனர்.
அதில், நியூசிலாந்து வீராங்கனைகள் தங்கியிருக்கக் கூடிய ஹோட்டலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அதே போல நியூசிலாந்து அணி நாடு திரும்பும் பொழுது அவர்கள் செல்லக்கூடிய விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்படும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நியூசிலாந்து கிரிக்கெட் அணியினருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025