வகுப்பறையில் நடனமாடிய 5 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்…!

உத்தர பிரதேச மாநிலத்தில் வகுப்பறையில் நடனமாடிய 5 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா எனும் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் வகுப்பறையில் மாணவர்கள் இல்லாத நேரத்தில் நடனமாடி அதை வீடியோவாக வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து இது தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
பின், நடனமாடிய ஐந்து ஆசிரியர்களை விசாரித்து, இது குறித்து விளக்கம் அளிக்குமாறு அந்த குறிப்பிட்ட பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து இது குறித்து நடனமாடிய அந்த நான்கு ஆசிரியர்கள் விளக்கமளித்த நிலையில், அவர்களது விளக்கம் திருப்தி அளிக்காத காரணத்தால், வகுப்பறையில் நடனமாடிய ஐந்து ஆசிரியர்களும் வகுப்பு நெறியை மீறி செயல்பட்டதாக கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!
May 9, 2025
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025