“1998ல் பாஜக ஆட்சியைக் கவிழ்த்து வரலாற்றுப் பிழையை செய்துவிட்டார் ஜெயலலிதா” – கடம்பூர் ராஜு கடும் விமர்சனம்.!

1998ல் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்தது குறித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.

Kadambur Raju - ADMK

சென்னை : முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு, ஜெயலலிதாவின் 1998-ல் பாஜக ஆட்சியைக் கவிழ்க்க எடுத்த முடிவு “வரலாற்றுப் பிழை” என்று விமர்சித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கடம்பூர் ராஜு, ”1998-ல் மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்தது வரலாற்று பிழை” என கூறியுள்ளார்.

சுப்பிரமணிய சுவாமியின் தவறான வழிகாட்டுதலால் ஜெயலலிதா வரலாற்றுப் பிழை செய்துவிட்டார். பாஜக ஆட்சியை கொண்டு வந்ததும் அதிமுகதான் கவிழ்த்ததும் அதிமுகதான். வரலாற்றுப் பிழையை செய்துவிட்டோம்.ஜெயலலிதா செய்த இந்த பிழையால் மத்தியில் காங்கிரஸ் திமுக கூட்டணி 15 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகவும் கூறியுள்ளார்.

பாஜகவை புகழ்வதாக நினைத்து ஜெயலலிதாவின் முடிவை விமர்சித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதால் அதிமுகவில் திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சிலர் இதை அதிமுகவின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டுடன் தொடர்புபடுத்தி, கடம்பூர் ராஜு பாஜகவுக்கு ஆதரவாக பேசுவதாக விமர்சித்துள்ளனர்.

அந்த வகையில், கடம்பூர் ராஜூவை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ”பாஜகவுடன் கூட்டணி வைத்து செய்த தவறுக்கு பரிகாரமாகவே ஆட்சியை கவிழ்த்தேன் என பேசியவர் ஜெயலலிதா. தங்களை வழக்குகளில் இருந்து காத்து கொள்வதற்காகவே முன்னாள் அமைச்சர்கள் இப்படி பேசுகின்றனர்” என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்