சென்னையில் திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன் போராட்டம்!

DMK alliance leaders stage a road blockade on Anna Road in Chennai against the central government's agricultural laws.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து சென்னை அண்ணா சாலையில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் சாலை மறியல் போராட்டம்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கண்டித்தும் இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. அதன்படி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி சென்னையில் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணாசாலையில் விசிக தலைவர் திருமாவளவன், இடதுசாரி தலைவர்கள் முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.