தமிழகத்தில் புதிதாக 1,578 பேருக்கு கொரோனா பாதிப்பு..!-24 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,578 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,578 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,66,964 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 188 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,627 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,607 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 26,14,291 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,51,855 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 4,72,99,526 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 17,046 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025