மறுமலர்ச்சி கவிஞர் சாமுவேல் வேதநாயகம் பிள்ளை பிறந்த தினம் இன்று …!

புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரும், மறுமலர்ச்சி கவிஞருமாகிய சாமுவேல் வேதநாயகம் பிள்ளை பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1826 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள குளத்தூர் பகுதியில் பிறந்தவர் தான் சாமுவேல் வேதநாயகம் பிள்ளை. புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளராக திகழ்ந்த இவர், மாயூரம் மாவட்டத்தில் 13 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இதனால் இவர் பெரும்பாலும் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கப்பட்டு உள்ளார்.
இவரது கவிதைகள் அனைத்தும் வாழ்க்கை நெறிகள், பொது நீதிகள், பெண்கல்வி, ஒற்றுமை, புதிய சிந்தனை மற்றும் முற்போக்கு சிந்தனை ஆகியவற்றை கருப்பொருளாகக் கொண்டு அமைந்துள்ளது. தமிழகத்தில் பஞ்சம் ஏற்பட்ட போது தனது சொத்துக்கள் அனைத்தையும் தானமாக வழங்கியவர் சாமுவேல் வேதநாயகம் பிள்ளை.
இவர் உடன்கட்டை ஏறும் வழக்கத்தையும் குழந்தை திருமணத்தையும் கடுமையாக எதிர்த்துள்ளார். சமூக சீர்திருத்தவாதியாகவும், மறுமலர்ச்சி கவிஞராகவும் தனது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்த வேதநாயகம் பிள்ளை 1889 ஆம் ஆண்டு தனது 62 வது வயதில் மறைந்துள்ளார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025