#Help: பாஜக வெள்ள நிவாரண உதவி எண்கள் அறிவிப்பு..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக வெள்ள நிவாரண உதவி எண்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் வெள்ளபாதிப்பால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டு, நிவாரண பணிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக வெள்ள நிவாரண உதவி எண்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘மழையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் உணவு கிடைக்க பாஜக சார்பில் சென்னை தி நகரில் சமையல் கூடம் அமைத்து பாஜக தொண்டர்களால் உணவு சமைக்கப்படுகிறது. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ள பாஜக வெள்ள நிவாரண உதவி எண்கள் : 9150021830, 9150021831′ என பதிவிட்டுள்ளார்.
மழையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் உணவு கிடைக்க @BJP4TamilNadu சார்பில் சென்னை தி நகரில் சமையல் கூடம் அமைத்து பாஜக தொண்டர்களால் உணவு சமைக்கப்படுகிறது.
தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ள பாஜக வெள்ள நிவாரண உதவி எண்கள்Help line no:
9150021830
9150021831 pic.twitter.com/DeX5toLzKQ— K.Annamalai (@annamalai_k) November 9, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025