சூப்பர்…சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளிக்கு-நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

புதுக்கோட்டை:12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுமி ஒருவர்,கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி வீட்டில் இருந்தபோது,அங்கு வந்த திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்த மாதவன் என்ற இளைஞர்,அத்துமீறி வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.மேலும்,அந்த சிறுமியை தொந்தரவு செய்து அடித்தபோது அருகே இருந்தவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதனையடுத்து,சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவரை கீரனூர் மகளிர் போலீசார் கைது செய்தனர்.அதன்பின்னர்,குற்றவாளி மீது போக்சோ மற்றும் குண்டர் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து,இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,நான்கு மாத காலத்திற்குள் விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி,12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேலும்,குற்றவாளிக்கு ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குறிப்பாக,பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதற்கு முன்னதாக ,இது போன்ற வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வணக்கம் சோழ மண்டலம் : “நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க” – தமிழில் பேசிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!
July 27, 2025
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025