#BREAKING: சிவகாசியில் பயங்கர வெடி விபத்து – 2 பேர் படுகாயம்!

Building ground level in Virudhunagar district Sivakasi due to exploding firecrackers without permission.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அனுமதி இல்லாமல் பேன்சி ரக பட்டாசுகள் வெடித்ததில் கட்டடம் தரைமட்டம்.

சிவகாசி அருகே நேருஜி நகர் பகுதியில் அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக குழாய் கம்பெனியில் பதுக்கி வைத்திருந்த பேன்சி ரக பட்டாசுகள் வெடித்ததில் கட்டடம் முழுவதும் இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளது. இந்த சம்பவம் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணிக்கு விரைந்துள்ளனர்.

இந்த கம்பெனியில் 6 பேர் பணிபுரிந்த நிலையில், வெடிவிபத்தில் படுகாயமடைந்த இருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் இந்த கட்டட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.