#Breaking:இந்த 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இன்று சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.குறிப்பாக, சென்னையில் இன்று காலை முதலே செல இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில்,ஈரோடு,சேலம்,நாமக்கல்,கள்ளக்குறிச்சி,பெரம்பலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தவிர புதுச்சேரி,காரைக்கலில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.மேலும்,மதுரை, ராமநாதபுரம்,நெல்லை,தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!
May 23, 2025
அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!
May 23, 2025