முடிவை மாற்றிய விக்ரம் பட இயக்குனர்.! மீண்டும் பழைய ஃபார்முலாவை கையில் எடுக்கும் படக்குழு.!

கோப்ரா படக்குழு ரஷ்யா செல்வதை தவிர்த்து, சென்னையில் செட் அமைத்து அந்த காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
சீயான் விக்ரம் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் படங்களில் ஒன்று கோப்ரா. படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் பெரும்பாலான காட்சிகள் ரஷ்யாவில் எடுக்கப்பட்டதாம். இன்னும் சில காட்சிகள் ரஷ்யாவில் எடுக்கவேண்டி இருக்கிறதாம். ஆனால், கொரோனா தொற்று காரணமாக ரஷ்யா செல்ல முடியாமல் படக்குழு திணறி வந்தது. படமும் முடியாமல் இழுத்து கொண்டே இருந்தது.
இதனால், படக்குழு தற்போது ஒரு முடிவு எடுத்துள்ளது. அதாவது, முழுவதும், க்ரீன் மேட் வைத்து படத்தை எடுத்துவிட்டு சிஜி வைத்து கிராபிக்ஸ் மூலம் ரஷ்யாவில் எடுத்தது போல மேட்ச் செய்துவிடலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதனால், சென்னையில் அதற்கான பணிகளை படக்குழு துவக்கியுள்ளதாம்.
விரைவில் கோப்ரா படத்திற்கான அடுத்தகட்ட அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025