தெறிக்கும் ‘பீஸ்ட்’ அப்டேட்.! முதல் பாடல் எப்போது வெளியாக உள்ளது தெரியுமா?!

தளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் புத்தாண்டு நள்ளிரவில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
தளபதி விஜய் நடிப்பில் தற்போது படு வேகமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். டார்க் காமெடி, ஆக்சன் கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறது.
பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும், செல்வராகவன் வில்லனாகவும் நடித்து வருகின்றார். மேலும் பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் இருந்து இரண்டு போஸ்டர்கள் மற்றும் சில ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மட்டுமே வெளியான நிலையில், படத்தின் அடுத்த அப்டேட் எப்போ வரும் என ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில் புதிய செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது, பீஸ்ட் படத்தின் முதல் பாடல் புத்தாண்டு நள்ளிரவில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. கிருஸ்துமஸ் தினத்தை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025