கொரோனா வைரஸ் “காலர் ட்யூன்” 2 வருடத்திற்கு பிறகு கைவிட அரசு திட்டம்..!

கொரோனா எச்சரிக்கை காலர் ட்யூனை நிறுத்த அரசு தயாராக உள்ளது. விரைவில் காலர் ட்யூன் நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவியுடன் இந்த தொற்றுநோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த இரண்டு வருடங்களாக ஒவ்வொருவரின் போனிலும் கொரோனாவின் காலர் ட்யூன் கேட்டு வருகிறது. நாம் மற்றவருக்கு கால் செய்யும்போது கொரோனா எச்சரிக்கை காலர் டியூன் கேட்கும். ஒரு புறம் மக்களுக்கு பயன் உள்ளதாக இருந்தாலும், மறுபுறம் மக்கள் வருத்தமடைந்துள்ளனர்.
காரணம் சில நேரங்களில் முக்கியமான அழைப்புகள் அழைக்கும்போது தாமதமாகிவிடும். இதனால் பலர் இந்த காலர் டியூனை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், ஒவ்வொரு முறையும் ட்யூனை கேட்குவதை தவிர்க்க பலர் வாட்ஸ்அப் அழைப்புகளை நம்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கலர் ட்யூன்களை நீக்கக் கோரி தொலைத்தொடர்புத் துறை மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு “காலர் ட்யூன்” நிறுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா காலர்டியூன் ஹிந்தியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் குரலில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Govt considering dropping COVID-19 pre-call announcements from phones after almost two years of raising awareness about disease: Official sources
— Press Trust of India (@PTI_News) March 27, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025