டெல்லி பயணம் நிறைவு – தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை:டெல்லி பயணத்தை முடித்து விட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேற்று இரவு சென்னை திரும்பினார்.
டெல்லி தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில்,பிரம்மாண்டமாக திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும்,முதலமைச்சருமான ஸ்டாலின் அவர்கள்,3 நாள் பயணமாக டெல்லி சென்றிருந்தார்.
மோடியை சந்தித்த முதல்வர்:
பின்னர்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நீட் விலக்கு,மேகதாது அணை விவகாரம்,இலங்கை தமிழர்களுக்கு நேரடியாக உதவ அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை அடங்கிய மனுவை அளித்தார்.
சுமார் ரூ.21 ஆயிரம் கோடி :
இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்களான ராஜ் நாத் சிங் மற்றும் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்தார்.மேலும்,மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து ஜிஎஸ்டி இழப்பீடு உள்ளிட்ட நிலுவையிலுள்ள சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாயை விரைந்து வழங்க வலியுறுத்தினார்.
திமுக அலுவலகம் திறப்பு:
இதனையடுத்து,நேற்று மாலை டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.மேலும்,திமுக புதிய அலுவலகத்தில் கட்சிக் கொடியை முதலமைச்சர் மு.கஸ்டாலின் ஏற்றி வைத்தார்.
திராவிட அரசியல் பயணம் (A Dravidian Journey):
அண்ணா- கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவில் அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், ‘Karunanidhi A Life’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டு,சோனியா காந்தி அவர்களுக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.மேலும்,திராவிட அரசியல் பயணத்தை விளக்கும் ‘A Dravidian Journey’ என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது.
பயணம் நிறைவு:
இந்நிலையில்,டெல்லி பயணத்தை முடித்து விட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேற்று இரவு சென்னை திரும்பினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025