பொங்கல் பரிசு வழக்கு – அமைச்சர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

பொங்கல் பரிசு தொடர்பான வழக்கில் அமைச்சர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசி குடும்ப அட்டைதாரர்களுக்காய் தரமற்ற பொங்கல் பரிசு வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ பெரியசாமி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பரிசு தொகுப்பு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூரை சேர்ந்த ஜெயகோபி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் வெல்லம், பச்சரிசி, புளி உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட பொருட்கள் அடங்கிய ‛பொங்கல் பரிசு தொகுப்பு’ வழங்கப்பட்டது. இதில், சில இடங்களில் பொருட்கள் தரமற்று இருப்பதாக புகார் எழுந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025