சௌராஷ்டிரா தமிழ் சங்கத்தின் நிறைவு விழாவில் புத்தகத்தை வெளியிட்ட பிரதமர் மோடி.!

Default Image

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்: இன்று நடைபெற்ற சௌராஷ்டிர தமிழ் சங்கத்தின் நிறைவு விழாவில், பிரதமர் மோடி, “சௌராஷ்டிரா-தமிழ் சங்கம்பிரஷஸ்தி”என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

தமிழ்நாட்டிற்கும் குஜாராத்திற்கும் இடையிலான 100 ஆண்டுகள் கடந்த உறவு குறித்தும் தமிழ்நாட்டில் குடியேறிய சௌராஷ்டிரா மக்களின் வாழ்க்கை தரம் குறித்தும் மாநில மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் என்னும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

PM Modi
[Image Source : Twitter]
குஜராத்தின் பல பகுதியில்  இந்நிகழ்ச்சி, கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி இன்று நிறைவடைகிறது. இந்த 10 நாள் சங்கமத்தில் 3000க்கும் மேற்பட்ட சௌராஷ்டிர தமிழர்கள் சிறப்பு ரயிலில், கடந்த 17ஆம் தேதி சோம்நாத் வந்தனர்.


இந்நிலையில், இதன் நிறைவு விழா இன்று சோம்நாத்தில் நடைபெற்றது. சௌராஷ்டிரா தமிழ் சங்கத்தின் நிறைவு விழாவில், பிரதமர் மோடி, “சௌராஷ்டிரா-தமிழ் சங்கம்பிரஷஸ்தி”என்ற புத்தகத்தை வெளியிட்டார். பின்னர், இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.

PM Modi
[Image source ; File ]
அப்போது, அவர் பேசுகையில், மிகவும் கடினமான சூழ்நிலைகளில் கூட புதுமைகளை உருவாக்கும் சக்தி இந்தியாவுக்கு உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியாவின் ஒற்றுமைக்கு வழிவகுப்பதோடு ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் என்று கூறினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்