ஐபிஎல் -இன் முதல் பாதி நிறைவு… எந்த அணிகள் டாப் லிஸ்ட் தெரியுமா..?

16வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 31ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியிலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த தொடர் தொடங்கியதிலிருந்து தினம் ஒரு போட்டியும் வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை, இரவு ஆகிய நேரங்களில் 2 ஐபிஎல் போட்டிகளும் என நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் பாதி நிறைவடைந்துள்ள நிலையில், 10 அணிகளும் தங்களுடைய 7 போட்டிகளையும் முழுவதுமாக விளையாடிவிட்டது. புள்ளி விவர பட்டியலை பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.
அதனை தொடர்ந்து குஜராத் அணி 7 போட்டிகளில் 5 போட்டிகள் வெற்றி பெற்று 2-வது இடத்திலும், ராஜஸ்தான் அணி 7 போட்டிகளில் 4 போட்டியில் வெற்றி பெற்று 3-வது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 7 போட்டியில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று 4-வது இடத்திலும் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025